மிக கனமழையால் பாதிக்கப்பட்டு சீர்குலைந்துள்ள கேரளாவுக்கு அனைத்து தரப்பு மக்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அண்டை மாநிலங்கள் அனைத்தும் கேரளாவுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கேரளாவுக்கு உதவிகளை அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  சபரிமலை விவகாரம்: நடிகர் சாருஹாசனின் சர்ச்சை கருத்து!

காவிரி,பவானி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஈரோடு, நாமக்கல் பகுதிகள் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது அவர் கேரள வெள்ளம் குறித்து பேசினார், 100 வருடங்களில் வராத ஒரு பேரழிவு கேரளாவில் ஏற்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் கேரளாவுக்கு நிவாரணம் அளித்தால் நன்றாக இருக்கும். தமிழக அரசின் சார்பில் கேரளாவுக்கு 10 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  மனித கழிவை அகற்ற ரோபோ எந்திரம்: கேரள அரசுக்கு கமல் பாராட்டு

மேலும் 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர், 10 ஆயிரம் போர்வைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கேரளப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தைப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நிவாரணமாக அளிப்போம் என முதல்வர் தெரிவித்தார்.