எச்.ராஜா தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட நினைக்கிறார் அது ஒருபோதும் நடக்காது என அதிமுக எம்.பி அருண்மொழிதேவன் கூறியிருக்கிறார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசுவதை ஒரு புல் டைம் ஜாப்பாகவே செய்து வருகிறார். சமீபத்தில் விநயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது முஸ்லிம், கிறிஸ்தவன் மட்டும் என்ன ஒசத்தியா? அவன் தருவது போல் நானும் லஞ்சம் தருகிறேன் என மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசினார். என்னமோ இவர் தான் இந்து மதத்தை காக்க வந்தவர் போல.

இவரது பேச்சிற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், வழக்கம்போல் அதிமுக அமைச்சர்கள் மௌனம் காத்தனர். அதிலும் முக்கியமாக அமைச்சர் மாபா பாண்டியராஜன், ஹெச்.ராஜா பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக கருத முடியது என கூறியது தான் ஹைலைட்டே.

இந்நிலையில் அதிமுக எம்.பியும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருண்மொழி தேவன், வக்கில்லாத வகையில்லாத ஹெச்.ராஜா எல்லா மதத்தினரும் ஒற்றுமையாய் அண்ணன், தம்பி போல் பழகி வாழும் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட நினைக்கிறார். அதை பார்த்துக்கொண்டு அதிமுக சும்மா இருக்காது என எச்.ராஜாவை பயங்கரமாக விமர்சித்து பேசினார்.

அட அதிமுகவில் இப்படி பாஜகவை நேரடியாக விமர்சித்து பேச எல்லாம் ஆள் இருக்காங்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.