நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக கேட்ட தொகுதிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

அதேபோல், அதிமுக – பாஜக கூட்டணி ஏறக்குறைய முடிவாகி விட்டதாக தெரிகிறது. தற்போது தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் பாஜக கேட்ட தொகுதிகள் அதிமுக தரப்புக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

தென்காசி, ஸ்ரீபெரும்புத்தூர், பெரம்பலூர், வேலூர், கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, வடசென்னை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக கேட்டுள்ளதாம். இதுவெல்லாம் அதிமுகவின் கோட்டை என்பதால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.