வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இந்நிலையில், இதில் அதிமுக வேட்பார் ஏ.சி.சண்முகம் தொடர் முன்னிலை வகித்து வருகிறார். தற்போதையை நிலவரப்படி அவர் 1,87,750 வாக்குகளும், கதிர் ஆனந்த் 1,74,646 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதாவது கதிர் ஆனந்தை விட ஏ.சி.சண்முகம் 13,104 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதேபோல், நாம் தமிழர் வேட்பாள்ர் தீபலட்சுமி 9,273 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்த நிலை நீடித்தால் வேலூர் தொகுதியை அதிமுகவே கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.