மத்தியில் அதிமுக தயவில் ஆட்சி அமையும் எனவும், மந்திரி சபையில் அதிமுக இடம்பெறும் எனவும் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதையொட்டி பொள்ளாச்சியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது கடந்த 10 வருடங்களாக டிடிவி தினகரன் கட்சியில் சேர்க்கப்படவில்லை. பாராளுமன்றத்திற்கே போகக்கூட்டாது என ஜெயலலிதாவால் டிடிவி தினகரன் விரட்டப்பட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  அப்படி பேசினால் ஜெயில்லதான் இருக்கனும்: ஜெயக்குமார் ஆவேசம்!

இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை அதிமுகவின் பக்கம் தான் தொண்டர்கள் இருப்பார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் அதிமுக தயவில் தான் ஆட்சி அமைக்க முடியும். அப்போது மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறும் என அதிரடியாக பேசினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.