Gautham Karthik’s Theemai Dhaan Vellum : கெளதம் கார்த்திக்கின் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார். இதனையடுத்து கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் சந்தோஷ்.

இதில் ‘ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்கள் அடல்ட் காமெடி ஜானர். ‘கஜினிகாந்த்’ படம் ‘பலே பலே மகாடிவோய்’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். சமீபத்தில், இயக்குநர் சந்தோஷ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

‘தீமைதான் வெல்லும்’ என்று டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது, கெளதம் கார்த்திக்கும், சந்தோஷுக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் டிராப்பானதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இன்னொரு தயாரிப்பு நிறுவனத்துக்கு, வேறு ஒரு ஹீரோவை வைத்து இந்த படத்தை இயக்க சந்தோஷ் திட்டமிட்டுள்ளாராம்.