கடந்த 15 வருடங்களுக்கு முன் அதாவது 2003ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய் நடித்த ‘திருமலை’, அஜித் நடித்த ‘ஆஞ்சநேயா’ மற்றும் சூர்யா-விக்ரம் நடித்த ‘பிதாமகன்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது. இவற்றில் ஆஞ்சநேயா தவிர மற்ற இரண்டு படங்களும் வெற்றி பெற்றன

இந்த நிலையில் சரியாக 15 வருடங்கள் கழித்து 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘தளபதி 62, அஜித்தின் ‘விசுவாசம்’ மற்றும் சூர்யா-செல்வராகவன் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

15 வருடங்களுக்கு பின் இந்த மும்முனை போட்டியில் வெற்றி பெறுவது யார்? என்ற கேள்விக்கு விடை வரும் தீபாவளி தினத்தில் தெரிந்துவிடும்