15 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணையும் சரத்குமார்-நெப்போலியன்

01:26 மணி

சரத்குமார், நெப்போலியன் இணைந்து நடித்த ‘தென்காசிபட்டணம்’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இருவரும் தனித்தனியே பல படங்களில் நடித்தாலும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. அந்த குறை தற்போது நீங்கியுள்ளது.

Loading...

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சரத்குமார் நடிக்கும் படம் ‘சென்னையில் ஓர்நாள் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க நெப்போலியன் ஒப்பந்தமாகியுள்ளார். 15 வருடங்களுக்கு பின் இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதை வசனத்தில் உருவாகும் இந்த படத்தை ஜேபிஆர் என்பவர் இயக்குகிறார். சுஹாசினி, முனிஷ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393