கோலிவுட்டில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது அஜித்தின் விவேகம்’ படத்தில் நடித்து முடித்துவிட்டி, ‘தளபதி 61’ படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் காஜல் அகர்வால் நடிக்க நடத்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துவிட்டதால் விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தை ‘பாகுபலி’ இயக்குனர் ராஜமெளலியின் உதவியாளர் மகாதேவ் இயக்க, ராஜமெளலியின் தந்தை விஜயேந்திரபிரசாத் கதை எழுதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த இந்த படத்தின் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதுபோக ராகவா லாரன்ஸ், பி.வாசு இயக்கும் ‘மன்னன்’ படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.