கவுதம் மேனனின் டுவிஸ்ட் முடிவுக்கு வரும் நாள் எது?

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் தான் இயக்க போகும் படத்திற்கு கடைசி வரை டைட்டில் வைக்கப்போவதில்லை என்றும், தனது படத்தின் டைட்டில் என்ன என்று ரசிகர்கள் தலையை பிச்சுக்கிட வேண்டும் என்றும் ஒரு வசனம் பேசியிருப்பார். கிட்டத்தட்ட அதே நிலைக்கு ரசிகர்களை கொண்டு வந்துள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்

‘தற்போது இயக்கி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையிலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்று அவர்  அறிவிக்க இல்லை. கடைசி வரை அறிவிக்காமல் இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ‘கட்டப்பா’ சஸ்பென்ஸ் போல இந்த சஸ்பென்ஸை பரபரப்பாக வைத்திருப்பதே கவுதம் மேனனின் திட்டமாம்

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மானா அல்லது ஹாரீஸ் ஜெயராஜா என ரசிகர்கள் குழம்பி கொண்டிருக்கும் நிலையில் உண்மையில் இந்த படத்திற்கு இசை கவுதம் மேனனே என்றும் படத்தின் இசை சக்ஸஸ் ஆனால் கடைசியில் பெயரை அறிவிக்கவிருப்பதாகவும், ஒருவேளை தோல்வி அடைந்தால் கடைசி வரை பெயரை அறிவிக்காமல் விட்டுவிடவும் கவுதம் மேனன் முடிவு செய்துள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.