நடிகை சமந்தா நடித்த ரங்கஸ்தலம் என்ற தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தில் சமந்தாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டுள்ளதால் சமந்தா உற்சாகத்தில் உள்ளார். மேலும் இந்த படத்தில் அவருக்கு விருது கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் விருது கிடைக்க சொந்தக்குரலில் டப்பிங் பேச வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனிவரும் திரைப்படங்களில் அவர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சொந்தக்குரலில் பேசி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
திருமணத்திற்கு முன்னர் சமந்தா நடித்த பெரும்பாலான படங்களுக்கு அவருக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் தான் குரல் கொடுத்தனர். ஆனால் இனி அவரே சொந்தக்குரலில் பேச முடிவெடுத்துள்ளார்.
சமந்தா நடித்தஅடுத்து நடித்து வரும் நடிகையர் திலகம், இரும்புத்திரை, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் சொந்தக்குரலில் டப்பிங் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது