மும்பை தாராவியை சென்னைக்கு தூக்கி வரும் ரஞ்சித்

12:04 மணி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் ரஜினியை பார்க்க அதிகளவில் கூட்டம் கூடுவதால் திட்டமிட்டபடி காட்சிகளை படமாக ரஞ்சித் திணறி வருகிறாராம்.

Loading...

இந்த நிலையில் ரஜினியின் ஒருசில முக்கிய காட்சிகளை மட்டும் தாராவியில் முடித்துவிட்டு ரஜினியை சென்னைக்கு அனுப்பிவிட்டாராம். தாராவியில் ரஜினி சம்பந்தப்பட்ட மீதி காட்சிகளுக்காக சென்னையில் உள்ள ஒரு தீம்பார்க்கில் தாராவி போன்ற செட், பலகோடி செலவில் தயாராகி வருகிறது.

மும்பை படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் உள்ள தாராவி செட்டில் இருபது நாட்கள் படப்பிடிப்பை நடத்த ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும், இத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை திரும்பிய ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

(Visited 2 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393