நயன்தாராவுடன் முடிந்தது, சமந்தாவுடன் ஸ்டார்ட் செய்யும் சிவகார்த்திகேயன்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் ஏற்கனவே திட்டமிட்டபடி, பொன்ராம் இயக்கத்தில் தனது அடுத்த பட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள உள்ளார்.

ஜூன் 16ஆம் தேதி இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெறும் என்றும் அன்றே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது,

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய 2 வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் – பொன்ராம்-டி.இமான் என்ற இந்த மெகா கூட்டணியின் அடுத்த படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனுடன் அவர் முதன்முதலாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் வழக்கம்போல் சூரியும் நடிக்கவுள்ளார் என்பதை சொல்லவே தேவையில்லை.