தனுஷ் இயக்கிய முதல் படமான ‘பவர்பாண்டி’ நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவரது இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் தற்போது தனுஷே இந்த படத்தை தயாரிக்கவுள்ளாராம். இந்த படம் பாகுபலி’ படத்திற்கு இணணயாக வரலாற்று கதை என்றும், தனுஷூடன் ஒரு பெரிய ஹீரோவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘நான் ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாககவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.