புலிகேசிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் இதுதான்?

vadivelu

தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, கதாநாயகனாக நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அதையடுத்து ‘கத்திச்சண்டை’ படத்தில் விஷாலுடன் நடித்து காமெடியனாக தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு இடத்தை பிடித்தார்.

இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஆர்.கே. நடிப்பில் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்திலும் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், விஜய்யுடன் ‘மெர்சல்’, கதாநாயகனாக ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ ஆகிய படங்களில் தொடர்ந்து பிசியானதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், தற்போது ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு பிசியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு ஆர்.கே. நடிக்கும் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளாராம். இப்படத்தை சக்திவேல் என்பவர் இயக்குகிறார். ஆர்.கேவும் வடிவேலுவும் ஏற்கெனவே ‘அழகர் மலை’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.