திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டாலும் மு.க.அழகிரி தனது முயற்சியை கைவிட்டதாக இல்லை. செப்டம்பர் 5-ஆம் தேதிக்கான பேரணியை நடத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

ஒரு லட்சம் பேர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என அறிவித்துவிட்டதால் அதற்கான பணியில் அழகிரியே முழுமூச்சாக இறங்கி வேலை செய்கிறார். மாவட்ட வாரியாக ஸ்டாலினால் ஓரங்கட்டப்பட்டவர்கள் லிஸ்ட் எடுத்து அவர்களிடம் அழகிரியே நேரடியாக பேசி வருகிறார்.

அழகிரிக்கு ஆதரவாளர்கள், ஸ்டாலினுக்கு எதிரானவர்கள், ஸ்டாலினால் ஒதுக்கப்பட்டவர்கள், அழகிரியால் பலனடைந்தவர்கள் என லிஸ்ட் எடுத்து பேசி வரும் அழகிரியிடம் சிலர் நேரடியாகவே அண்ணே இப்ப பதவியில இருக்கோமே…. அழகிரியிடம் சேர தயங்குகிறார்களாம்.

ஆனால் இப்படி தயங்குபவர்களிடம் அழகிரி, என்னய்யா பதவி… இன்னும் ஆறு மாசம் கழிச்சு நான்தான் தலைவர். இதவிட நல்ல பதவி உனக்குக் கிடைக்கும்யா என இப்போது பேச ஆரம்பித்துவிட்டாராம். ஸ்டாலின் தலைவராக பதவியேற்ற பின்னர். இப்போது ஓரிரு நாட்களாகவே அழகிரி இப்படி பேசுகிறாராம்.