பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியாவுக்கு மாபெரும் வரவேற்பை பொதுமக்கள் அளித்தனர். ஆனால் ஜூலி வெளியேறும் போது முகத்தை மூடிக்கொண்டு அவமானப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலையே வீட்டுக்கு சென்றுவிட்ட ஜூலி அனைத்து எபிசோட்களையும் பார்த்து தனது தவறுகளை நினைத்து வருந்தினாராம். ஜூலி மீது அவருடைய பெற்றோர்களும் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜூலியின் சகோதரர், ‘ஜூலி இன்னும் இரண்டு மாதங்களுக்கு முழு ஓய்வு எடுக்கவுள்ளார். அதன் பின்னரே அவர் தனது வேலையை தொடர்வது குறித்து முடிவு செய்வார் என்றும் அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் அதற்கு வீட்டில் அனுமதி கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.