இயக்குனர் விஜய் இயக்கிய ‘தியா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் நடிகை சாய்பல்லவி. இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சாய்பல்லவி தற்போது தனுஷுடன் மாரி 2 மற்றும் சூர்யாவுடன் ‘NGK’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களிலும் சாய்பல்லவி முழு கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த படங்களின் வெற்றிதான் தன்னுடைய திரையுலக வாழ்வை தீர்மானிக்கும் என்றும் சாய்பல்லவி நம்புகிறாராம்

இந்த நிலையில் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடந்து வருவதாகவும் இதில் தனுஷ் சாய்பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.