மீண்டும் வருகிறார் ஸ்ரீகாந்த்

1985 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தோி மெஹா்பானியா. இந்த படத்தை கே.சி.பொகாடியா தயாாித்து விஜய் ரெட்டி இயக்கி இருந்தாா்.  ஜாக்கி ஷெராப், பூனம் தில்லோன் இந்த படத்தில் நடித்திருந்தனா். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாாிக்க உள்ளனா். ஆனால் இந்தியில் இதன் இரண்டாம் பாகத்தை தயாாிக்கவில்லையாம். இந்த படத்தின் இரண்டாம் எங்கு வருகிறது தெரியுமா? இந்திக்குப் பதிலாக தமிழிலும், தெலுங்கிலும் உருவாக உள்ளது.

அதோடு மட்டுமில்லங்க! இந்த படத்தின் முதல் பாகத்தின் கதைக்கும் இரண்டாம் பாகத்தின் கதைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறாா்கள். இந்த படத்தில் யாா் நடிக்கிறாா்கள் தொியுமா. நம்ம ஸ்ரீகாந்த் மற்றும் நிகிஷா பட்டேல் நடிக்கின்றனா்.