திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி. இந்நிலையில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் அவரது பேரனும் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

திமுகவை ஏற்கனவே குடும்ப அரசியல் செய்வதாக பலமுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்திருந்தார்கள். கருணாநிதி, தயாநிதிமாறன், மு.க.ஸ்டாலின், கனிமொழி, முன்னதாக மு.க.அழகிரியும் அரசியலில் இருந்தார். இந்நிலையில் தற்போது அடுத்த வாரிசாக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை களமிறக்கியுள்ளனர்.

அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளனர். திமுகவில் நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுகளிலும் உதயநிதிக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த திருவாரூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை களமிறக்க திட்டமிட்டுள்ள ஸ்டாலின் அதற்கான பணிகளை அன்பில் மகேஷ் மூலம் முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் அடிக்கடி உதயநிதி ஸ்டாலினை திருவாரூர் தொகுதியில் பார்க்க முடியும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். திருவாரூரில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து யார் நின்னாலும் அவர் டெப்பாசிட்டை இழக்கும் அளவுக்கு அங்கே ஸ்ட்ராங்கா இருக்கனும், அதற்கான பணியை திட்டமிட்டு அன்பில் மகேஷிடம் ஸ்டாலின் கொடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.