விஜய்சேதுபதியை மீண்டும் இயக்கும் சீனு ராமசாமி

விஜய் சேதுபதிக்கு திரையுலகில்  நுழைய முக்கிய பங்கு வகித்தவர் சீனு ராமசாமி. சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவரை தனது தென்மேற்கு பருவக்காற்று மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தவ்ர் சீனு ராமசாமி. தொடர்ந்து இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களில் சேர்ந்து பணிபுரிந்தார்கள்.

இதில் தர்மதுரை படத்திற்காக வைரமுத்துக்கு தேசிய விருது கிடைத்தது நாம் அறிந்ததே. ஆனால் விஜய் சேதுபதிக்கும், விருது கிடைக்கும் என்று நினைத்தாராம் சீனு ராமசாமி. இந்த நிலையில் விஜய் சேதுபதியை மீண்டும் இயக்குகிறார் சீனு ராமசாமி. படத்திற்கு மாமனிதன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு தேசிய விருதினை வாங்கி தரவேண்டும் என்ற முனைப்பில் ஒரு கதை தயார் செய்துள்ளாராம் சீனு.   படத்தினை இசையமைத்து தயாரிக்கிறார் யுவன் சங்கர் ராஜா.