வடசென்னை மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் வீரா திரைப்படம் என்று இசையமைப்பாளா் பிரசாத் S.N என்று தெரிவத்துள்ளார்.

வீரா படத்தின் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரசாத் s.N. ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பின்னணியும் இசையும் முக்கியம். பின்னணி இசை சரியாக அமையவில்லை என்றால் படம் முழுவதும் நன்றாக இருக்காது. ஆனால் யாரும் பின்னணி இசையக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என கூறிய வீரா படத்தின் இசையமைப்பாளான பிரசாத், மேலும் கூறியதாவது, படத்தில் சண்டை காட்சியாக இருக்கட்டும், நகைச்சுவை காட்சியாகட்டும் ஒரு பின்னணி இசை தான் அதை மாற்றி அமைக்கும் சக்தி உண்டு. உணா்ச்சிகரமான காட்சியை கூட நகைச்சுவை காட்சியாக மாற்றும் வலிமை பின்னணி இசைக்கு அதிகம்.

வீரா திரைப்படம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை தெளிவாக காட்டும் வகையில் இருக்கும். தேவையில்லாமல் எந்தவொரு காட்சியையும் திணிக்கவில்லை. தேவையான இடத்தில் மட்டும் தான் நகைச்சுவை காட்சி மற்றும் சண்டைக்காட்சி அமைந்துள்ளது. யாமிருக்க பயமே படக்குழுவிடன் மீண்டும் இணைந்துள்ளேன். இந்த டைரக்டரின் அடுத்த படம் காட்டேரி. காட்டேரி படமும் இந்த படத்தின் பாதியில் வெளியாக கூடும். இந்த படத்திற்கும் யாமிருக்க பயமேன் படத்தை விட அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. Independent Music அதிக ஆா்வம் உள்ளது. அதனால் இரண்டு திட்டங்களும் உள்ளது.