சரத்குமார் முதலில் வில்லனாக நடித்து பின் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர். 1990ஆம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவான புலன் விசாரணை படத்தில் ஹீரோவாக நடித்தவா் விஜயகாந்த். அந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்த சரத்குமாரின் கதாபாத்திரம் ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சரத்குமாருக்கு இதன் மூலம் நடிப்பு வட்டாரத்தில் அவரது அசத்தலான நடிப்பு மிகவும் பேசப்பட்டது. அதன் பின் ஒரிரு படங்களில் வில்லனாக நடித்தார்.

அடுத்து தன்னுடைய நடிப்பு திறமையால் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்தார். சேரன் பாண்டியன், சூரியன் என தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து முன்னணி ஹீரோ பட்டியலில் இடம் பிடித்தார். இவருக்கு நாட்டாமை படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் உள்ள நாயகர்களுக்கு போட்டியாக வலம் வந்தார். அதற்கு பிறகு இளம் தலைமுறை நடிகர்களின் வரவு அதிகாரித்து விட்ட காரணத்தால் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் பார்வையை செலுத்தினார்.

வில்லனாக நடிக்காத அவா், தற்போது தெலுங்கில் வில்லனாக நடிக்க உள்ளார். அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கும் என் பேரு சூர்யா, என் வீடு இந்தியா என்ற படத்தில் வில்லனாக அடியெடுத்து வைக்கிறார். ராணுவ வீரரின் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ராணுவ வீரனாக அல்லு அர்ஜூன் நடிக்கிறார். இந்த படத்தின் ஹைலைட்டே அல்லு அர்ஜூன் சரத்குமார் சம்பந்தப்பட்ட சண்டை காட்சி. சரத்குமார் அல்லு அர்ஜூனுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் பன்னி என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜூன் மற்றும் சரத்குமார் மோதும் சண்டைக்காட்சி மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். எனவே சரத்குமார் ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப வந்துள்ளார்.