நகுல்-சுனைனா இணைந்து நடித்த ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி ரசிகர்கள் மத்தியில் பெரம் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில், ‘நாக்குமுக்கா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி நகுல் புகழின் உச்சிக்கே சென்றார். இதையடுத்து, இந்த ஜோடி மீண்டும் ‘மாசிலாமணி’ படத்தில் கைகோர்த்தது. இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நகுல்-சுனைனா ஜோடி மீண்டும் ஒரு ரொமான்டிக் நகைச்சுவை படமொன்றில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விளம்பர பட இயக்குநர் சச்சின் தேவ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

மேலும், இப்படம் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.