சுவிட்சர்லாந்த் நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரை வாடகை காரில் வைத்து அதன் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த ஓட்டுநருக்கு எச்ஐவி எயிட்ஸ் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த 18 வயது மாணவி அன்று மது அருந்தி போதையில் இருந்ததாகவும், உணர்வுகளை தூண்டும் விதமாக அவர் நடந்துகொண்டதாக விசாரணையின் போது டாக்ஸி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

தான் தங்கியிருந்த வீட்டுக்கு செல்ல டாக்ஸில் ஏறிய 18 வயது மாணவியை, அந்த எயிட்ஸ் பாதித்த ஓட்டுநர் அருகாமையில் உள்ள பூங்காவுக்கு அழைத்து சென்று தனது காரின் பின் இருக்கையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கூச்சலிட்ட மாணவியை கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

20 நிமடத்திற்கு பின்னர் அவரது பிடியில் இருந்து தப்பித்த மாணவி போலீஸில் இது தொடர்பாக புகார் அளித்தார். அந்த நபர் ஏற்கனவே இதுபோல 5 பெண்களை பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தனக்கு எயிட்ஸ் இருப்பது தெரிந்தே இந்த நபர் இப்படி செய்துள்ளார்.

ஆனால் மருத்துவ அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எயிட்ஸ் பாதிப்பு இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் தற்போது அந்த டாக்ஸி ஓட்டுநர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது லூசெர்ன் குற்றவியல் நீதிமன்றம்.