மதுபோதையில் இருந்த விமான பணிப்பெண்ணை 3 ஆண்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பிரபல விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் 23 வயது இளம்பெண் கடந்த திங்கட் கிழமை சத்ரபதி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அதே விமான நிலையத்தில் பணிபுரியும் செக்யூரிட்டியான சொப்னைல் படோனியா(23) என்பவர் அவரை காரில் அழைத்து சென்றுள்ளார். அதன் பின் இருவரும் ஒரு பாருக்கு சென்று மது அருந்தியுள்ளனர். இருவரும் அளவுக்கு அதிகமாக அருந்திவிட்டதால் போதையில் தள்ளாடினர்.

இதையும் படிங்க பாஸ்-  இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்து பிணத்துடன் செக்ஸ் - சைக்கோ சிறுவன் கைது

எனவே, இந்த நிலையில் வீட்டிற்கு செல்ல முடியாது எனக்கருதி அதே ஹோட்டலில் அறை எடுத்து தங்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களுக்கு அறை கொடுக்கப்படவில்லை. எனவே, எனது அறைக்கு செல்லலாம் எனக்கூறி சொப்னைல் விமான பணிப்பெண்ணை தனது அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது அறையில் தங்கியுள்ள ஒரு ஆண்களும், ஒரு பெண்ணும் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  25 வருடங்களாக பெற்றோரை தவிக்க விட்டவர் நாசர் - சகோதரர் பேட்டி

காலை 10 மணியளவில் அப்பெண் எழுந்த போது தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார். அவரது உடலில் கீறல்களும், காயங்களும் இருந்தன. இதுபற்றி அங்கிருந்த பெண்ணிடம் கேட்டபோது எதுவும் தெரியாது எனக்கூறியுள்ளார். செக்யூரிட்டி சொப்னைல் தனக்கு எதுவும் நினைவில்லை எனக்கூறிவிட்டார். எனவே, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற அப்பெண் அங்கு மருத்துவர்களிடம் தனக்கு நடந்ததை கூற, இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  'சர்கார்' படத்துக்கு மறுபடியும் பிரச்சனையா?

முதல் கட்டமாக செக்யூரிட்டி சொப்னைலிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரது அறையில் இருந்த 2 பேருடன் சேர்ந்து சொப்னைலும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் எனக் போலீசார் கருதுகின்றனர். எனவே, மற்ற இருவர்களையும் போலீசார் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.