லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ஐரா.

இந்த படத்தில் இருந்து மூன்றாவது பாடலான ஜிந்தாகோ பாடல் வெளியாகி உள்ளது.

ஐரா படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே. எஸ் சுந்தமூர்த்தி இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே ஐரா படத்தில் இருந்து மேகதூதம் மற்றும் காரிகா பாடல்கள் யூடியூப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது மீதமுள்ள ஒரு ஒரு பாடலான ஜிந்தகோ வெளியாகி உள்ளது. இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மாரச் 28ம் தேதி ஐரா படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.