ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சிறப்பான சலுகைகளை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோ அறிமுகம் ஆனதில் இருந்து மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஜியோவின் அசுர வளர்ச்சியை சமாளிக்க முடியாமல் மற்ற நிறுவனங்களான ஏர்டெல், பி.எஸ்.என்.எல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் போராடி வருகின்றன.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் ரூ 148 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் 145 ரூ சேவையில் ரூ. 145 டாக்டைம், 1 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

இந்த சலுகைகள் தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியா முழுமைக்கும் இந்த ஆஃபர் வழங்கப்பட இருக்கிறது.