உப்புமா படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா என கேட்பார்கள்: பிரபல நடிகை ஓபன் டாக்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தின் மூலம் அனைவரையும் பேச வைத்த அவர் தற்போது விக்ரம், தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக நடிகைகள் பலரும் தாங்கள் தாங்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்த லிஸ்டில் நடிகை ஐஸ்வர்யாவும் சேர்ந்துள்ளார். ஆம்…இது குறித்து அவர் கூறியபோது, சில உப்புமா படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா என கேட்பார்கள், அதனை அக்ரீமெண்ட், அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட் என பல பெயர்களில் கேட்பார்கள் என்றும் கூறினார்.