rithvika

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டை தான் அதிகமாக இருக்கிறது. முன்பு யாஷிகாவும், ஐஸர்வா்யாவும் பொன்னம்பலத்தை பற்றி கிழவன் என்று இந்தியில் பேசியதை வைத்து நேற்று சண்டை அரங்கேறியது. வைஷ்ணவியும் ஐஸ்வர்யாவும் போட்ட சண்டை பார்வையாளர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது பிக்பாஸ். அந்தளவுக்கு மிகவும் கொடுமையாக இருந்தது. சொல்லப்போனால் ஐஸ்வர்யா சொன்னதை சொல்லி ரசிகா்களை கடுப்பேற்றி கொண்டிருந்தார் என்று தான் சொல்லவேண்டும்.aiswarya

இதையும் படிங்க பாஸ்-  யாருடனும் கூட்டு சேரமாட்டேன்: தனிக்கட்சி தொடங்கும் முடிவில் கமல்

இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் ஐஸ்வர்யாவும் ரித்விகாவும் எதற்காக சண்டை போடுகிறார்கள் என்றே தெரியவில்லை. இங்கு இப்படி சண்டை நடப்பதை சிறையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் மகத், நல்ல வேளை என்னை சிறையில் அடைத்தீர்கள். நன்றி பிக்பாஸ் என்று கூறுகிறார். இப்படி சண்டை நடக்கும் போது நான் அங்கு இருந்தால் ரொம்ப ஃபயர் ஆகியிருப்பேன் என்று கூறுகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸால் ஓவியாவுக்கு கிடைக்காதது மும்தாஜுக்கு கிடைத்தது: 22ம் தேதி பாருங்க

mahat

தினம் ஒருவருடன் ஐஸ்வர்யா சண்டை போட்டு கொண்டிருக்கிறார். இதனால் பார்வையாளர்களின் வெறுப்பை தான் சம்பாதித்து வருகிறார். இன்று வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் என்ன காரணத்திற்காக ரித்விகாவுடன் ஐஸ்வர்யா சண்டை போடுகிறார் என்று தெரியவில்லை. வாரம் வாரம் ஐஸ்வர்யா நாமினேஷன் பட்டியலில் வந்தாலும் பிக்பாஸ் அவரை காப்பாற்றி விடுகிறார். ஐஸ்வர்யாவை இந்த வாரமும் எவிக்சன் பட்டியலில் இருந்தும் பிக்பாஸ் காப்பாற்றி விட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸில் என் ஆதரவு இவருக்குத்தான்- சுனைனா ஓபன் டாக்