பிக்பாஸ் ஐஸ்வர்யா சிம்புவின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக சென்றாயன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் 2 இறுதி நிலையை எட்டியிருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் சற்று மசாலாவை சேர்க்க பிக்பாஸ் 1 போட்டியாளர்களையும், அதேபோல் இந்த சீசனில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியளர்களும் அவ்வப்போது பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். சிநேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, ஷாரிக், ரம்யா, நித்யா ஆகியோர் தற்பொழுது வரை பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  எச்சைகளோட எனக்கென்ன சாவகாசம். பிக்பாஸ் காயத்ரி ஆவேசம்

இந்நிலையில் இன்று சென்றாயன், மகத் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். அப்போது சென்றாயன் ஐஸ்வர்யாவிடம் உன்னை சிம்பு கேட்டதாக கூறினார் என சொன்னார். மேலும் அவரின் படத்தில் உன்னை(ஐஸ்வர்யாவை) ஹீரோயினாக்க முடிவு செய்திருப்பதாகவும் சென்றாயன் ஐஸ்வர்யாவிடம் கூறினார். இதனைக் கேட்டு குஷியான ஐஸ்வர்யா ஐ ல்வ் யூ எஸ்.டி.ஆர் என ஆர்ப்பரித்தார்.