பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா செய்த கீழ்த்தரமான காரியத்தை விஜயலட்சுமியின் கணவர் தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ்2 இறுதி நிலையை எட்டி உள்ளதால் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கடுமையான டாஸ்குகளை கொடுத்து வருகிறார். அதில் ஒரு இடத்தில் போட்டியாளர் கை வைத்துக் கொள்ள மற்ற போட்டியாளர்கள் எதையாவது செய்து கையை அங்கிருந்து எடுக்கவைத்து அவர்களை தோற்கடிக்க வேண்டும். போட்டியாளர்களை தோற்கடிக்க மற்ற போட்டியாளர்களை பல்வேறு யுதிக்களை கையாண்டனர். தனது டாஸ்கை முடித்தபின் பேசிய ஐஸ்வர்யா இந்த டாஸ்கில் பலர் தன்னை மிகவும் கொடுமைபடுத்தியதாக ஓவராக நடித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே பிக்பாஸ் ஐஸ்வர்யாவை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளது. அதனால் ஐஸ்வர்யா செய்த பல கீழ்த்தரமான வீடியோக்களை விஜய் டிவி வெளியிடவில்லை. ஆனால் நேற்று ஐஸ்வர்யா செய்த கீழ்த்தரமான செயலை விஜியின் கணவர் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஐஸ்வர்யா விஜி முகத்தில் ஸ்பிரே அடிக்கிறார். இந்த காட்சியை பார்த்த மக்கள் பலர் ஐஸ்வர்யாவையும், பிக்பாஸையும் வசை பாடி வருகின்றனர்.பிக்பாஸ் ஐஸ்வர்யாவை ஏன் இப்படி அடைகாத்து வருகிறது என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.