aiswarya rai

90கிட்ஸ்களுக்கெல்லாம் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். பின் அபிஷேக் பச்ச்னை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் ஏக் தில் ஹை முஷ்கில் படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் படுகவர்ச்சியாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

aiswarya

இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப் மற்றும் ஜெயா பச்சனுடன் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்களித்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் நடுவிரலை காட்டி ஸ்டில் கொடுத்தனர். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டீசன்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.