ஐஸ்வர்யா ராஜேஷின் ஹவுஸ் ஓனர் யார் தெரியுமா?

‘தர்மதுரை’ படத்தின் மூலம் தரமான நடிகை என்ற பெயரெடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல குணசித்திர நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘ஹவுஸ் ஓனர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தில் தனக்கு நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருப்பதாகவும், இந்த படமும் ‘தர்மதுரை’ படம் போலவே தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்றும் கூறியுள்ளார்.

சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினர்களின் கனவாய் இருக்கும் நிலையில் இதுகுறித்துதான் இந்த கதையில் இயல்பாக விளக்கப்படவுள்ளதாக லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.