மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்?

02:20 மணி

தல அஜித் நடித்த 56வது மற்றும் 57வது படங்களான ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்தின் 58வது படத்தையும் இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மட்டும் உண்மையாக இருந்தால் முதல்முறையாக தொடர்ச்சியாக மூன்று அஜித் படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமை சிறுத்தை சிவாவுக்கு சேர்கிறது

‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் ஐரோப்பாவிற்கு அஜித், விவேக் ஓபராய், சிவா ஆகியோர் சென்றிருக்கும் நிலையில் அஜித்துக்கு மேலும் ஒரு கதையை சிவா கூறியதாகவும், அந்த கதை அஜித்துக்கு பிடித்துவிட்டதால் அடுத்த படத்தையும் அவரே இயக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கொண்ட ஜாலியான படம் என்றும் அஜித் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருமுழுநீள குடும்பக்கதையில்  நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393