குறைந்த பட்ஜெட்: தீபாவளி ரிலீஸ்: அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்

Siva, Ajith @ Vivegam Movie Wroking Stills HD

தல அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

அஜித்தின் 58வது படத்தையும் இயக்குனர் சிவா இயக்குகிறார். ஆனால் இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் கிராமத்தில் நடக்கும் செண்டிமெண்ட் கலந்த கதை. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்குவதாகவும், இந்த படம் 2018 தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.