அஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கி தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான ‘அஜித் 59’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையில் தொடங்கும் என்று கூறப்படுகிறது

அஜித்தின் 59வது படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாகவும் இந்த படம் சோழர் கால கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை வரும் 2019ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது