Nerkonda Paarvai Trailer – தற்போது வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை பட டிரெய்லரில் நடிகர் அஜித் பேசும் ஒரு வசனம் விஜய், அஜித் ரசிகர்கள் இருவருக்கும் அறிவுரையாக அமைந்துள்ளது.

அஜித் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் பாலிவுட் படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சாரதா ஸ்ரீநாத், வித்யா பாலன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித்தின் 'விவேகம்' ரன்னிங் டைம்

அடித்துக் கிளப்பும் தல பட டிரெய்லர் – 45 நிமிடத்தில் செய்த சாதனை

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இதற்காகவே காத்திருந்த அஜித் ரசிகர்கள் பலரும் இந்த டிரெய்லரை வீடியோவை கண்டு களித்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  பொறுத்து பொறுத்து பொறுமையை இழந்த தல ரசிகர்கள்!

இப்படத்தில் அஜித் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இந்த டிரெய்லரில் ஒரு காவல் அதிகாரியை பார்த்து ‘ஒருத்தர் மேல் நீங்கள் விஸ்வசம் காட்டுவதற்காக மற்றொருவரை ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள்?’ என ஒரு வசனத்தை அஜித் பேசுகிறார்.

டிவிட்டரில் விஜய் ரசிகர்கள் அஜித்தையும், அஜித் ரசிகர்கள் விஜயையும் எப்போதும் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். எனவே, அஜித் பேசும் இந்த வசனம் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் ரசிகர்களுக்கும் அறிவுரை சொல்வது போல் அமைந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  பாஜகவுக்கு செக்! அறிக்கை விட்டு ஆப்படித்த அஜித்...