மகளுக்காக டயர் ஓட்டி விளையாடிய தல அஜித்! ஆச்சரிய வீடியோ

தல அஜித் ஒரு நடிகர் மட்டுமின்றி நல்ல பைக் ரேசர் என்பதும், பிரம்மாதமாக கார் ஓட்டுபவர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பைக் ஓட்டிய, கார் ஓட்டிய அஜித், மகளுக்காக டயர் ஓட்டிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் மகள் அனோஷ்காவுடன் அஜித் டயரை ஒரு குச்சியால் ஓட்டி விளையாடும் வீடியோ டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

இந்த விளையாட்டில் உலகில் உள்ள அனைத்து மாடல் மோட்டார் பைக்குகளையும் ஓட்டும் வல்லமை படைத்த அஜித்தால், அந்த டயரை ஓட்ட திணறுவது வேடிக்கையாக உள்ளது.