தனியார் நிறுவனம் ஒன்று இந்திய அளவில் நம்பத்தகுந்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அஜித் தோனி போன்ற பிரபலங்கள் இடம்பெறாததால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

ஸ்போர்ட்ஸ்டார் எனும் நிறுவனம் 2019 ஆம் ஆண்டிற்கான நம்பத்தகுந்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சினிமா மற்றும் விளையாட்டு வீர்ரகள் ஆகியோர் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், சல்மான்கான், அக்சய்குமார் மற்றும் ஷாருக்கான் ஆகிய ஐவர் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  மெர்சல் டீஸர் எப்போது?

தென்னிந்திய அளவில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோர்கள் மட்டுமே ஆகும். அஜித், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் இடம்பெறவில்லை. இதேபோல விளையாட்டு வீரர்களில் இந்திய அளவில் அதிகளவு செல்வாக்கு செலுத்திவரும் வீரரான தோனிக்கும் இடமளிக்கவில்லை. இதனால் அஜித் மற்றும் தோனி ரசிகர்கள் அதிருப்தியடைந்து தங்கள் கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.