அஜித் படத்தில் மகேஷ்பாபு: ஒரு ஆச்சரிய செய்தி

அஜித் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் அனைத்து ஏரியாக்களின் வியாபாரமும் முடிந்துவிட்டதால் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' படத்தின் டிரைலரை 'விவேகம்' ரிலீசுக்கு முந்தைய நாள் அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதுமடுட்மின்றி 'விவேகம்' வெளியாகும் திரையரங்குகளிலும் இந்த படத்தின் டிரைலரை வெளியிட ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் அஜித் ரசிகர்களுக்கும், மகேஷ்பாபு ரசிகர்களுக்கும் நிச்சயம் இதுவொரு ஆச்சரியம் தரும் செய்தியாகத்தான் இருக்கும்