கடந்த மாதம் திடீரென மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவி இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஸ்ரீதேவிக்கு மிகவும் நெருக்கமான குடும்பங்களில் ஒன்று அஜித் குடும்பம். அஜித்தும், ஷாலினியும் வாரம் ஒருமுறை ஸ்ரீதேவியுடன் போனில் பேசுவார்களாம்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் ஸ்ரீதேவியின் 16ஆவது நாள் சடங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட அஜித், ஷாலினி, போனிகபூர் மற்றும் அவரது மகள்களுக்கு நேரில் ஆறுதல் கூறினர்.