அஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா!

மலேசியாவில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவில் கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களான அஜித், விஜய் கலந்து கொள்ளவில்லை என்ற செய்திகள் வெளியாகியுள்ளது

அஜித், விஜய் இருவருக்குமே தற்போது படப்பிடிப்புகள் இல்லை. இருந்தும் இந்த விழாவில் அவர்கள் கலந்து கொள்ளாததற்கு காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் கமல், ரஜினி மற்றும் விஷாலுக்கு மட்டுமே இந்த விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால் இருவரும் கலந்து கொள்ளவிலலி என்று கூறப்படுகிறது

அஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா களைகட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்