அஜீத் , மந்த்ரா நடித்த ரெட்டை ஜடை வயசு, அர்ஜூன் ரோஜா நடித்த ஆயுத பூஜை படங்களை இயக்கியவர் சிவக்குமார். இவர் பிரபல இயக்குனர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் ஆவார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்த இவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார் இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது.