ஹெச்.வினோத் இயக்கும் ’பிங்க்’ ரீமேக் படத்திற்காக அஜித்திற்கு எவ்வளவு சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படம் பொங்களன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.இதையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான “பிங்க்” படத்தின் ரீமேக் படத்தில் தல அஜீத் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

இதன் மூலம் ‘பிங்க்’ ரீமேக்கில் அஜித் – வினோத் – போனி கபூர் இணையவுள்ளார்கள் என்பது உறுதியாகி படத்தின் பூஜை போடப்பட்டது.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் அஜீத்தின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கவுள்ளார்.சாரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தில் அஜீத் இடம் பெறாத 25 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் அஜீத் நடிக்கும் காட்சிகள் படமாக்க பட உள்ளது.தற்போது அங்கு படத்திற்கான செட் போடப்பட்டு வருகிறது.

விரைவில் அஜீத் அங்கு சென்று  படக்கழுவினருடன் இணையவுள்ளார்.மொத்தம் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு மொத்தக் காட்சிகளையும் நடித்துக்கொடுக்க இருக்கிறார்.

இந்நிலையில் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் இந்த படத்திற்கு அஜித்திற்கு 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தை அஜீத்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.