அஜித் சென்னை திரும்பும் நாள் இதுதான்!

தல அஜித் தற்போது பல்கேரியாவில் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்புடன் உள்ளார். அவர் பிறந்த நாளான மே 1ஆம் தேதி கூட அவர் தனது குடும்பத்தினர்களுடன் இருக்க முடியாத அளவுக்கு படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளதாகவும் முழு படப்பிடிப்பும் இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும், வரும் 12 அல்லது 13ஆம் தேதி விமானத்தின் டிக்கெட் கிடைப்பதை பொறுத்து அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது,

மேலும் ‘விவேகம்’ படத்தின் டீசர் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் அஜித் மற்றும் இயக்குனர் சிவா சென்னை திரும்பியுடன் அவர்கள் அனுமதியுடன் இம்மாத இறுதியில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதால் இயக்குனர் சிவா, சென்னை திரும்பியதும் முழுவீச்சில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார்.