Connect with us

அரசியல்

பாஜகவுக்கு செக்! அறிக்கை விட்டு ஆப்படித்த அஜித்…

Published

on

திருப்பூரில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்துள்ள வேளையில் நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன். என்னுடைய தொழில் நடிப்பு என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம். சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான். என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர்கள் இயக்கங்களின் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு அது.

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொது மக்கள் இடையே விதைக்கும்.

இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்ன வென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்பு. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும் மாட்டேன். நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும், அதையேதான் நான் வலியுறுத்துகிறேன். அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்று பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.

அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை, மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை.

எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடைமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. வாழு வாழவிடு” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல வருடங்களாக எது பற்றியும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த அஜித், அவரின் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்துவிட்டதால் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

bigil trailer
சினிமா செய்திகள்2 hours ago

முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

செய்திகள்3 hours ago

இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

செய்திகள்4 hours ago

ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

செய்திகள்4 hours ago

தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன ?

செய்திகள்4 hours ago

பிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு !

செய்திகள்4 hours ago

தம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 15.10.2019

bigg boss 314 hours ago

பிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்1 week ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்6 days ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்4 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending