விஸ்வாசம் பட வெற்றியை வேலூர் மாவட்ட அஜித் ரசிகர்கள் கொண்டாடிய விதம் பலரையும் கவர்ந்துள்ளது.

அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய சிவா 4வதாக எடுத்த படம் விஸ்வாசம். கடந்த 10ம் தேதி வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை குடும்பம் குடும்பாக ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில், இந்த வெற்றியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.

விஸ்வாசம் வெற்றியை கொண்டாடும் வகையில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி சமூக விழிப்புணர்வை உருவாக்கி வருகின்றனர். மேலும், மரங்களை வளர்த்து இயற்கையை போற்றி பாதுகாத்திடுமாறும் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அஜித் ரசிகர்களின் இந்த செயல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.