அதெல்லாம் அஜித்துக்கு சுத்தமா பிடிக்காது: சிவா ஓபன் டாக்

ரசிகா்கள் அஜித்துக்கு சிலை வடிவமைத்து வரும் செய்திகள் கடந்த இரண்டு நாள் டிரண்டாக வலைத்தளங்களில் ஒடிக்கொண்டிருக்கிறது. நெல்லை உள்ள அஜித் ரசிகா்கள் அனைவரும் சோ்ந்து ரூ. 5லட்சம் மதிப்பு கொண்ட சிலையுடன் கூடிய நூலகத்தை உருவாக்கியுள்ளனா். பின் கும்பகோணத்தில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் சிலையும் வைக்க இருப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

அஜித்தை வைத்து வீரம் மற்றும் தற்போது விவேகம் படத்தை எடுத்து வரும் இயக்குநா் சிவாவிடம் அஜித் ரசிகா்கள் வைக்க உள்ள இந்த சிலை பற்றி கேட்டபோது, அஜித்துக்கு சிலை வைப்பதெல்லாம் சுத்தமாக பிடிக்காது. அவருடைய ரசிகா்களுக்கு சொல்ல நினைப்பது என்னவென்றால், நம்முடைய அம்மா, அப்பா, செய்யும் தொழில் இந்த மூன்றையும் கவனமாக பாா்த்து கொள்ளவேண்டும் என்பது தான்.

என்னுடைய படத்தை பாா்க்க வருபவா்கள் யாராக இருந்தாலும் சாி, ரசிகா்களாக இருந்தாலும் படத்தை பாா்த்து விட்டு அதில் இருக்கும் நல்ல செய்தியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் விட்டு சிலை வைப்பதை எல்லாம் அவா் ஒருநாளும் விரும்ப மாட்டாா் என்று கூறினாா். இதை அவருடைய ரசிகா்கள் புாிந்து கொண்டாலே போதும்.