அஜித் ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னாமாகிய இயக்குனர் அட்லி

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50% முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெகுவிரைவில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ‘விஜய் 61’ படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது? என்று விஜய் ரசிகர்கள் அட்லியின் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்க, அதற்கு அட்லி, அஜித்தின் ‘விவேகம்’ டீசர் வரட்டும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ‘வேதாளம்’ படத்தின் டீசரில் உள்ள ‘தெறிக்க விடலாமா’ வசனத்தை உல்டா செய்து தான் விஜய்யின் படத்திற்கு ‘தெறி’ என்று அட்லி டைட்டில் வைத்ததாக விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் வகையில் ‘விவேகம்’ படத்தின் டீசர் வரட்டும் என்று அஜித் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அட்லியின் இந்த பதிலுக்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் சமூக  வலைத்தளங்களில் அட்லியை திட்டி தீர்த்து வருகின்றனர். குறிப்பாக அஜித் ரசிகர்களிடம் அட்லி சிக்கி சின்னாபின்னாமாகிவிட்டதாக கூறப்படுகிறது.